ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்கிற பழமொழியை நிரூபிக்க வந்துள்ளார் நந்திதா. டான்ஸராக சினிமாவில் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர், ஒரு இடைவெளிக்குப் பிறகு அரிதாரம் பூசியுள்ள படம் ‘சிபி’. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ராஜ்குமார் நடிக்கிறார். சரத்பாபு, டெல்லி கணேஷ், ‘கடலோராக் கவிதைகள்’ ரேகா, வெண்ணிற ஆடை மூர்த்தி, சுமன் ஷெட்டி, அபிநயா என பெரிய நட்சத்திரப் பட்டாளமே இருக்கிறது.
உதவும் உள்ளம் படைத்த ஹீரோவை கண்மூடித்தனமாக காதலிக்கும் நாயகி, ஒரு கட்டத்தில் தனது காதலுக்கு, தானே வில்லியாகிறார். அதன் பிறகு நடப்பது க்ளைமாக்ஸ்.
‘‘சினிமாவுக்கு முழுமையாக முழுக்குப் போட்டிருந்த நிலையில் இயக்குநர் ஜார்ஜ் பிரசாத் இந்தக் கதையைச் சொன்னார். பிடித்திருந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன்...’’ என்கிறார் நந்திதா.
- ரா