‘லவ் டுடே’ பாலசேகரன் ஒரு இடைவெளிக்குப் பிறகு இயக்கியுள்ள படம். நாயகன் ஆண்டி கோலத்தில் பழனி மலையில் யாசகம் எடுப்பதுதான் ஆரம்பக் காட்சி. அவர் ஏன் அந்த நிலைக்கு மாறினார் என்பதை சுவாரஸ்யமாக சொல்ல முயன்றிருக்கிறார்கள். ‘ராட்டினம்’ படத்துக்குப் பிறகு லகுபரனும், ஸ்வாதியும் இணைந்து நடித்திருக்கிறார்கள். பாக்யராஜ், விசு ஆகிய இருவரும் தலா இரண்டு காட்சிகளுக்கு மட்டும் வந்து போகிறார்கள். இரண்டாவது நாயகியாக வரும் சான்யதாரா க்ளாமர் சாய்ஸ்.
திருமதி தமிழ் : விமர்சனம்இயக்குநர் இராஜகுமாரன் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ள படம். 1980களில் இந்தப் படம் வந்திருந்தால் ஒருவேளை வெற்றி பெற்றிருக்கலாம். பழைய காட்சிகள். அதை பழமையாகவே படம் பிடித்திருக்கிறார்கள். தேவயானிக்கு இதில் இரட்டை வேடம். என்றாலும் அட்வகேட் தேவயானிதான் ஸ்கோர் பண்ணுகிறார். கீர்த்திசாவ்லாவுக்கு வேலை குறைவு. பெட்டர் நெக்ஸ்ட் டைம் இராஜ குமாரன்.