‘கல்லூரி’ அகில் ஹீரோவாக நடிக்கும் படம் ‘வாலு’. நாயகியாக ‘பேராண்மை’ சரண்யாநாக் நடிக்க, ஒரு பாடலுக்கு குத்தாட்டாம் ஆடியுள்ளார் சோனா. செல்வகணேஷ் இசையில் அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார். சென்னை பீமண்ணன் பேட்டையில் வாழ்ந்த வாலு என்கிற குணசேகரன் என்பவரின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறாராம் இயக்குநர் தேசிகா.
‘‘காதல் கதைகளில் மட்டும் நடித்து வந்த நான் முதன் முறையாக நிஜ வாழ்க்கையில் வாழ்ந்த ஒருவரின் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். முடிந்தளவுக்கு கேரக்டருக்கு உயிர் கொடுத்திருக்கிறேன். இந்தப் படம் என்னுடைய சினிமா வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாக அமையும். சரண்யா நாக் பந்தா இல்லாமல் பழகக் கூடிய ஹீரோயின் என்பதால் ஆன் ஸ்கிரீன் கெமிஸ்டரி ஒர்க் அவுட் ஆகியுள்ளது. எனவே ரொமான்ஸ் காட்சிகள் படத்தில் ஹைலைட்டாக இருக்கும்...’’ என்கிறார் அகில்.
- எஸ்