அப்பாவுடன் கிராமத்தில் எளிமையாக வாழும் நாயகனுக்கு, தான் வளர்க்கும் பசுமாட்டின் மீது பாசம் அதிகம். ஒரு கட்டத்தில் அவனுக்குத் தெரியாமலே அந்த மாட்டை விற்று விடுகிறார் அப்பா. அதை வாங்கியவரைத் தேடி பக்கத்து ஊருக்குப் போகும் போது நாயகியுடன் காதல் மலர்கிறது. எதிர்ப்புகளை மீறி காதல் ஜெயித்ததா என்பது கதை.
‘கல்லூரி’ அகில் இயல்பை இழக்காமல், எதார்த்தத்தை மீறாமல் நடித்துள்ளார். கேரக்டரோடு கச்சிதமாகப் பொருந்துகிறார்.குறும்பும் காதலும் கலந்த கிராமத்துப் பெண்ணாக வலம் வருகிறார் ‘ரேனி குண்டா’ சனுஷா.
நாயகனின் அப்பா சித்தன் மோகனின் உருக்கமான நடிப்பும், சிங்கம் புலியின் காமெடி கலாட்டாவும் படத்துக்கு தோள் கொடுக்கின்றன.வெட்டி பந்தா பண்ணும் வில்லன் கோஷ்டிகள் மிரட்டுகிறார்கள்.
பரத்வாஜ் இசையில் பாடல்களில் எளிமையான இனிமை. அடடா! என்று சொல்ல முடியாமல் இயக்குநர் தமிழ்வாணன் எதிரில் உட்கார்ந்திருக்கும் நந்தி எது என்று தெரியவில்லை.