சகோதரர்களின் போதைப் பொருள் பிஸினஸால் ரவிதேஜாவின் இமேஜ் கெட்டுப் போனதைப் படித்து வருத்தப்பட்டேன்.
பா.சக்திவேலன், நெல்லை.
பிட்ஸ் அபவுட் பகுதியில தேவிகாவின் பயோடேட்டா சூப்பர் தலைவா..!
டி.சங்கர், நாகை.
நமீதா ஒரு ரவுண்டு வருவாரா?னு வாசகர் கேட்ட கேள்விக்கு ‘ட்ரம்’ போல இருப்பதை ‘ட்ரிம்’ ஆக்கினால் என சிபியார் சொல்லியிருந்த பதில் நையாண்டி சார்!
ஜி.கலைவாணி, புதுச்சேரி.
இசையமைப்பாளர் தாஜ்நூரை ‘ஏழைகளின் ஏ.ஆர்.ரஹ்மான்’னு கவிஞர் வைரமுத்து பாராட்டியுள்ளதை வரவேற்கிறோம்!
.எஸ்.குகன், விருதுநகர்.
ஸ்ருதிஹாசனின் நடுப்பக்க படத்தைப் பார்த்துவிட்டு இன்ப அதிர்ச்சி என்ற பள்ளத்துல குதிச்சுட்டேன் நைனா!
எஸ்.கணபதிராவ், சென்னை 49.