ஆந்திரா ஆவக்காய்
17 கோடிகளை முதல் வார கலெக்ஷனாக எடுத்திருக்கும் ‘மிரப்பாகயா’விற்கு நிஸாம் ஏரியாவின் விநியோகஸ்தராகியுள்ளார் ரவிதேஜா.பால கிருஷ்ணா, பரச்சுர முரளி இணைந்துள்ள பட ஷூட்டிங்கில் கேமராமேன் விஜய் தீ விபத்தால் படுகாயமடைந்துள்ளார்.ஆளாளுக்கு பிகினி போட்டு ஆடுகிறார்கள். அதற்கெல்லாம் தியேட்டரில் கூட்டம் வராது என தத்துவம் பேசியுள்ளார் விமலா ராமன்.‘ஷோலே’ வை ரீமேக் பண்ணும் பூரி, ஹீரோக்களாக கோபிசந்த் மற்றும் பிரபாஸை அறிவித்துள்ளார்.நயன்தாரா சீதையாக நடிக்க எதிர்ப்பலை கிளம்பிய ‘ஸ்ரீராம ராஜ்யத்தை’ ஹீரோ பாலகிருஷ்ணாவின் பிறந்தநாளில் ரிலீஸ் செய்ய திட்டம் வைத்துள்ளனர்.‘நாக்கு லவ்வர் உந்தி’ என்ற தலைப்புள்ள காமெடி படத்துக்கு நாயகனாகியுள்ளார் கிருஷ்ணடு.நாகார்ஜுனாவின் புதிய படத்திற்கு ‘துலாபாரம்’ எனத் தலைப்பிட்டுள்ளனர்.சில வருடங்கள் முன்பு மகேஷ் ஜோடியாக பிரபலமான அம்ரிதா ராவ், தில் ராஜீ தயாரிக்கும் படத்திலிருந்து சண்டை போட்டு விலகியுள்ளார்.மாதவன் நடித்த ‘தம்பி’ படத்தை ‘க்ரோதம்’ என்ற பெயரில் டப் செய்து வெளியிடுகிறது இஷ்கான் கிரியேஷன்ஸ். கிரி
|