அரசியல், மாணவர் சக்தி, ரவுடி ராஜ்யம், ஈவ்டீசிங் கொடுமை என நாட்டு நடப்பை அலசும் வகையில் உருவாகியுள்ளது ‘மின்சாரம்’.கோவை பிலிம் சிட்டி சார்பில் எம்.எஸ்.தமிழரசன், பழனி எம்.இலியாஸ் தயாரிக்கும் 4வது படம் இது.
அறிமுகம் யுவராஜ் , மதுசந்தா ஜோடியுடன் பாலாசிங், ‘கானா’ உலகநாதன், ‘என்னுயிர்த் தோழன்’ ரமா, சுஜிபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
கதை, திரைக் கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமா கிறார் என்.செல்வ குமாரன்.
‘‘தொல்.திருமா வளவன் மீது எனக்கு மதிப்பு உண்டு. அவரிடம் ஒரு பாடல் எழுதித்தருமாறு கேட்டேன். அவரது அலுவலகத்திலிருந்து புறப்பட்ட கார் அண்ணாநகர், வேளச்சேரி, அசோக்நகர் என நான்கு மணி நேரம் சுற்றியது. திரும்பவும் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்த போது முழுப்பாடலையும் எழுதிவிட்டார். ‘விழித்தெழு மனிதா...’ என்ற அந்தப்பாடல் நரம்புகளை முறுக் கேற்றும். அதில் வரும் ‘பொறுக்கி வேறு, போராளி வேறு’ என்ற வரியை தமிழர் அமைப்பைச் சேர்ந்த பலரும் பாராட்டியுள்ளார்கள்’’ என்கிறார் செல்வகுமாரன்.
‘‘இந்தப் படத்தில் முதலமைச்சர் கேரக்டரில் திருமாவை நடிக்க வைக்க அவரை ரொம்பவும் சமாதானம் செய்தோம். ‘அரசியல்வாதிக்கு வந்த ஆசையைப்பாரு’ என்று கேலி செய்வார்கள்’ என தயங்கினார். ஒருவழியாக நடிக்க வைத்து விட்டோம். அவரது நடிப்பு இயல்பாக வந்துள்ளது’’ என்கிறார் தயாரிப்பாளர்களில் ஒருவரான தமிழரசன்.
‘காசிமேட்டுக் குப்பத்தையே கலக்குறாளே...’ என்று ‘கானா’ உலகநாதன் பாடிய பாடல் இன்னொரு ‘வாளமீனுக்கும்...’ என்கிறது படக்குழு.
பாரதி