நாயகனின் அப்பா விபத்தில் இறந்துவிடுகிறார். சக போலீஸ்காரர் ஒருவர் அந்த குடும்பத்தின் வாழ்க்கைக்கு உதவி செய்கிறார். ஒரு கட்டத்தில் அவரது மகளையே காதலிக்கிறான் நாயகன். அதனால் அவனது அம்மா தற்கொலை செய்து கொள்கிறார். அடுத்து என்ன என்பது கிளைமாக்ஸ்.
புதுமுகங்கள் அனீஷ் & ஸ்ருதி இருவரும் கேரக்டருக்கு பலம். அம்மா கேரக்டருக்கென்ற நேர்ந்து விடப்பட்ட சரண்யா பொன்வண்ணனும், உதவி செய்யும் போலீஸ்காரரான அவினாஷும் படம் முழுக்க மனதில் நிற்கிறார்கள்.
ஜேம்ஸ் வஸந்தன் இசையில் பாடல்களை காட்சியோடும் பார்க்கலாம், தனியாகவும் கேட்கலாம். தவசிராஜின் சண்டைக்காட்சிகள் எளிமையான அட்டாக். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ‘குப்பி’ படத்தில் பெயர் பெற்ற ஏ.எம்.ஆர்.ரமேஷ்.
சாதி வேறுபாடு, மதச்சண்டை, தாய்ப்பாசம், காதலர் வேதனை என எல்லாத் தளத்திலும் புகுந்து விளையாடி எளிமையான ‘தாஜ்மகால்’ கட்டியிருக்கிறார் ஏ.எம்.ஆர்.ரமேஷ்.