மனதை நெகிழ வைக்கும் ஒரு காதல் கதை. அறியாத பருவத்தில் இருக்கும் காதல் ஜோடியை பெற்றோர்கள் பக்குவமாக பிரித்து வைக்கிறார்கள். பிரிந்த காதல் ஜோடி ஒன்று சேர்ந்தார்களா என்பதை போரடிக்காமல் சொல்லி யிருக்கிறார்கள்.
டீன் ஏஜ் கடந்த பையன் ரோலுக்கு ஜெயந்த் கச்சிதமாக பொருந்தி, ஆட்டம், பாட்டம் என்று அமர்க்களப் படுத்துகிறார்.
புதுமுக நாயகி ஸ்ரீநிதியின் நடிப்புத் திறமையை மனம் திறந்து பாராட்டலாம். மாணவியாக, காதலியாக, மனம் பாதிக்கப்பட்டவராக என்று நடிப்பில் மின்னு கிறார். பாபி இசையில் ‘கரக்கா முரக்கா...’ பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கிறது. எதிர்பார்ப்பு இல்லாமல் உள்ளே போகும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஸ்டீபன்.