காமெடியை மையமாக வைத்து உருவாகும் படம் ‘தந்திரன்’. இதில் நாயகர்களாக சந்தானம், இயக்குனர் ஷக்தி சரவணன் நடிக்கிறார்கள்.
‘அங்காடித் தெரு’ மகேஷ் நடிக்கும் படம் ‘இரவும் பகலும்’ இதில் ‘சீடன்’ அனன்யா நாயகியாக நடிக்கிறார்.
கடந்த 20 வருடங்களில் 6000 பக்திப்பாடல்களைப் பாடியிருக்கிறார் வீரமணிதாசன். இவர் ஏவி.எம் தயாரிக்கும் ‘முதல் இடம்’ படத்தில், இமான் இசையில் ‘உய்யா உய்யா உட்டாங்கோ, உசுர வந்து தொட்டாங்கோ...’ என்ற பாடலை பாடியிருக்கிறார். தவிர, ‘பகடை’ படத்தில் ஸ்ரீகாந்த் தேவா இசையில் ஒரு பாடலைப் பாடி சினிமா பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
‘வந்தான் வென்றான்’ படத்தில் நடித்துவரும் டாப்ஸி தெலுங்கில் ‘வீரா’ உள்பட மூன்று படங்களை கைவசம் வைத்துள்ளார்.
ஹன்சிகா மோத்வானியின் முக்கிய பொழுதுபோக்கு இன்டர் நெட்டில் கடலை போடுவது தானாம். இவருக்கு ஜெனிலியா, ரீமா சென் உள்பட பல நடிகைகள் ஃபேஸ்புக் தோழிகளாம்.
முதன் முறையாக ‘ஜோக்கர்’ என்ற இந்திப் படத்துக்கு இசையமைக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். அக்ஷய் குமார் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை சிரிஷ் குந்தர் இயக்குகிறார்.
இரண்டாவது திருமணத்துக்குப் பிறகு மும்பையில் செட்டிலாக திட்டமிட்டுள்ளார் பிரபுதேவா.
எஸ்