டைட்டில் ரோலில் ப்ருத்விராஜ் நடிக்கும் படம் ‘அன்வர்’. ‘தீவிரவாதத்துக்கு பயப்படாமல் எதிர்த்து போராடுங்கள்’ என்பதுதான் கதை. ஒரு குண்டுவெடிப்பில் தன் குடும்பத்தினரை இழக்கும் ப்ருத்விராஜ் மதத்தலைவர் லாலுவுடன் சேர்ந்து தீவிரவாதிகளுக்கு பாடம் புகட்டுகிறார்.
நாயகியாக மம்தா மோகன்தாஸ் நடிக்கிறார். போலீஸ் அதிகாரி மணிமாறனாக பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். கோவை, மும்பை உள்பட இந்தியாவில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்ட இந்தப் படத்தை அமல் நீரத் இயக்கியுள்ளார். இவர் ராம் கோபால் வர்மாவிடம் சினிமா பயின்றவர். ராஜ் ஜக்கரியா தயாரித்துள்ள இந்தப் படத்தை ரெட் கார்ப்பெட் மூவிஸ் விநியோகம் செய்கிறது.