அக்கா மீனா மீது மட்டுமே அளவற்ற பாசம் வைத்திருக்கும் நரேன், என்.எஸ்.எஸ்க்கு சென்ற இடத்தில் பூனம் பஜ்வா மீது காதலில் விழுகிறார். நாயகியின் கொடூர அப்பா, நரேனைத் தாக்கி குற்றுயிராக பாலத்தில் தொங்கவிடுகிறார். அதே நரேன் அந்த ஊர் பாலத்தைக் கட்டி, பலத்தைக் காட்டி, காதலில் ஜெயிக்கிறார். எப்படி? அதுதான் திரைக்கதை.
நரேன், பூனம் பஜ்வா காதல் ஜோடியின் கலகலப்பு, சந்தானத்தின் அதிரடி காமெடி, பிரபுவின் சென்டிமென்ட், மீனாவின் பாசத்தைக் கொட்டும் நடிப்பு, ‘நான் கடவுள்’ ராஜேந்திரனின் மிரட்டல் என கதம்பக் கலவையாக சுவையூட்டுகிறது படம்.
விவேகா எழுதியுள்ள அத்தனை பாடல்களுக்கும் இசை வெற்றி.
சுப்ரீம் சுந்தரின் சண்டைக் காட்சிகளில் கத்திரி வெயில் தெறிக்கிறது.சென்டிமென்ட், ஆக்ஷன் கலந்து அதிரடி மசாலாப்படம் கொடுத் துள்ளார் இயக்குநர் அம்முரமேஷ்.