கைதியின் காதல்



Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

‘‘ஏழ்மையில் வாழும் ஒரு கிராமத்து இளைஞன், சாதனை புரிவதற்காக சந்திக்கும் போராட்டம்தான் ஸ்டார் பிக்சர்ஸ் சார்பில் சக்திவேல் தயாரிக்கும் ‘கீழத்தெரு கிச்சா’ கதை’’ என்கிறார் இயக்குனர் மாதவன். நாயகனாக ரமேஷ்ராம், நாயகியாக தர்ஷா நடிக்கிறார்கள்.

‘‘விளையாடும்போது ஏற்படும் சண்டையில் நாயகன் ஒரு மாணவனை தள்ளிவிட, அவன் இறந்து விடுகிறான். சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்படும் நாயகன், சிறையிலிருந்து வந்த பிறகு தன்னுடைய லட்சியத்தை அடைந்தானா? சிறுவயதில் தான் நேசித்த காதலியை அடைந்தானா? என்பதை காதல், சென்டிமெண்ட் கலந்த எமோஷனல் படமாக இயக்கியுள்ளேன்.

ரமேஷ்ராம் புதுமுகமாக இருந்தாலும் சேறு, சகதி, மழை என்று எந்த சூழ்நிலையில் படம் பிடித்தாலும் தன்னை வருத்திக் கொண்டு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். கஞ்சா கருப்பு, அஜய் ரத்னம், பாலாசிங், முத்துக்காளை, மாஸ்டர் மதனன் என்று ஒவ்வொருத்தருடைய கேரக்டரும் ரசிகர்களை பரவசப்படுத்தும்’’ என்கிறார் மாதவன்.
 ரா