பாலக்கீரை சாதம்தேவையான பொருட்கள்

புழுங்கல் அரிசி - 1 கப், எண்ணை - 1 1/2 மேசைக்கரண்டி, அன்னாசி பூ - 1, ஏலக்காய் - 2, பட்டை - 1 துண்டு. லவங்கம் - 3, சீரகம் - 1/2 டீஸ்பூன், பிரிஞ்சி இலை - 1, பாலக்கீரை - 2 கப், பச்சை மிளகாய் - 3, இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன், வெங்காயம் - 1, உருளைக்கிழங்கு - 1, கரம் மசாலா - 1/2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 2 சிட்டிகை, புதினா - ஒரு கைப்பிடி, எலுமிச்சை சாறு, உப்பு - தேவைக்கு.

செய்முறை

அரிசியை வேகவைத்து தனியாக எடுத்து வைக்கவும். பாலக் கீரையை நன்றாக கழுவி, விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணை சேர்த்து மசாலா பொருட்களை சேர்த்து வதக்கவும். இதனுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும். பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதனுடன் உருளைக் கிழங்கு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து வேகவிடவும்.

பிறகு அதனுடன் கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அரைத்துள்ள கீரை விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி அடுப்பை விட்டு இறக்கி வேகவைத்த சாதத்தை சேர்த்து நன்கு கலக்கவும். தேவைப்பட்டால், எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம்.