கத்தரி மொச்சை சாதம்தேவையான பொருட்கள்

உதிராக வடித்த சாதம் - 2 கப், கத்தரிக்காய் - 6, காய்ந்த மொச்சை - கால் கப், பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 3, மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, பிரிஞ்சி இலை - 2, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்.அரைக்க: தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன், தனியாத் தூள் - அரை டீஸ்பூன், இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 3 பல், சோம்பு - அரை டீஸ்பூன்.

செய்முறை

மொச்சைக் கொட்டையை முதல் நாளிரவே ஊற வைத்து, மறுநாள் சிறிதளவு உப்பு சேர்த்து வேக வையுங்கள். கத்தரிக்காய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை மெல்லியதாக நறுக்குங்கள். அரைக்கக் கூறப்பட்டுள்ளவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்தெடுங்கள்.

எண்ணெயில் பிரிஞ்சி இலையை தாளித்து வெங்காயம், கத்தரிக்காயை மஞ்சள் தூள் சேர்த்து வதக்குங்கள். காய் முக்கால் பதம் வெந்ததும், தக்காளி, அரைத்த விழுது, மொச்சைக் கொட்டை, தேவையான உப்பு சேர்த்து சுருளக் கிளறி இறக்குங்கள். சாதத்துடன் இந்த விழுதைச் சேர்த்துக்
கலக்குங்கள்.