எள் சாதம்தேவையான பொருட்கள்

உதிராக வடித்த சாதம் - 2 கப், கடுகு - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, நெய் - 1 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக்கு.
பொடிக்க: எள் - 2 டேபிள் ஸ்பூன், உளுந்து - 1 டேபிள் ஸ்பூன், மிளகாய் வற்றல் - 8, தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், பெருங்காயம் - சிறு துண்டு.

செய்முறை

எள்ளை வெறும் வாணலியில் போட்டு, பொரியும்படி வறுத்தெடுங்கள். எண்ணெயில் பெருங்காயத்தைப் பொரித்து பிறகு மிளகாய், உளுந்து, தேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சேர்த்து சிவக்க வறுத்தெடுங்கள். எள் உட்பட, வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து நைஸாக பொடித்து வையுங்கள். நெய்யில் கடுகு, கறிவேப்பிலையை தாளியுங்கள். சாதத்தில் எள் பொடி, உப்பு ஆகியவற்றைத் தூவி, கடுகு தாளிதத்தை சேர்த்துக் கலக்குங்கள்.