கொத்தமல்லி சாதம்



தேவையான பொருட்கள்

உதிராக வடித்த சாதம் - 2 கப், கடுகு, உளுந்து - தலா அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு, நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.
அரைக்க: மல்லித் தழை - 2 கட்டு, மிளகாய் வற்றல் - 10, உளுந்து - 1 டேபிள் ஸ்பூன், பெருங்காயம் - சிறு துண்டு, புளி - சிறு எலுமிச்சை அளவு, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக்கு.

செய்முறை

மல்லித் தழையை சுத்தம் செய்யுங்கள். எண்ணெயில் பெருங்காயம், மிளகாய் வற்றலை வறுத்தெடுங்கள். பிறகு உளுந்தை வறுத்து எடுத்து தனியே வையுங்கள். பிறகு மல்லித் தழையை வதக்குங்கள். இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து, அதனுடன் உப்பு, புளி சேர்த்து நைஸாக அரைத்தெடுங்கள். நெய்யில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளியுங்கள். சாதத்தில் அரைத்த விழுது, தாளிதக் கலவை, உப்பு அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கிளறுங்கள்.