காய்கறி எலுமிச்சை சாதம்தேவையான பொருட்கள்

பச்சரிசி - 2 கப், எலுமிச்சம் பழம் - 2, கேரட் - 1, பீன்ஸ் - 10, காலிஃப்ளவர் - 1 துண்டு, பட்டாணி - அரை கப், இஞ்சி - 1 துண்டு, பச்சை மிளகாய் - 3, மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், பெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு - அரை டீஸ்பூன், உளுந்து - 1 டீஸ்பூன், கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன், முந்திரி - 10, எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக்கு.

செய்முறை

அரிசியை சிறிதளவு உப்பு சேர்த்து உதிராக வேக வையுங்கள். காய்கள், இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள். எண்ணெயில் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, முந்திரி ஆகியவற்றைத் தாளித்து காய்கறிகள், இஞ்சி, மிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, சிறிதளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். காய்கறிகள் வெந்ததும், எலுமிச்சம் பழச் சாறு சேர்த்து இறக்குங்கள். இந்தக் கலவையை சாதத்தில் கொட்டி, உப்பு சேர்த்துக் கிளறுங்கள்.