ஸ்பெஷல் தயிர் சாதம்தேவையான பொருட்கள்

பச்சரிசி - 2 கப், பால் - அரை கப், புளிக்காத புதிய தயிர் - இரண்டரை கப், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்தரைத்த விழுது - 2 டீஸ்பூன், வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், பெருங்காயம் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, மல்லித் தழை - சிறிது, கடுகு - 1 டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 3, பொடியாக நறுக்கிய முந்திரி - 2 டேபிள் ஸ்பூன், திராட்சை - 15, எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு  - தேவைக்கு.
 
செய்முறை

சாதத்தை குழைவாக வேக வையுங்கள். சாதம் சூடாக இருக்கும்போதே அதனுடன் உப்பு, வெண்ணெய், பெருங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, பால் மற்றும் கறிவேப்பிலை, மல்லித்தழை ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்குங்கள். எண்ணெயில் கடுகு, மிளகாய், முந்திரி, திராட்சை (திராட்சை சிவக்கக் கூடாது) ஆகியவற்றை தாளியுங்கள். சாதத்தில் தாளிதக் கலவை, தயிரைக் கலக்குங்கள்.