மும்பை சாதம்



தேவையான பொருட்கள்

பச்சரிசி - அரை கப், தோலுடன் உடைத்த பாசிப் பருப்பு -1 கப், மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, பச்சை மிளகாய் - 2, நெய் - 2 டேபிள் ஸ்பூன், கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவைக்கு.

செய்முறை

குக்கரில் அரிசி, பருப்பு இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய், மஞ்சள் தூள், உப்பு மற்றும் நான்கு கப் தண்ணீர் சேர்த்து வேக வையுங்கள். ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கி ஐந்து நிமிடங்கள் வைத்து இறக்குங்கள். பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்குங்கள். வாணலியில், மீதமுள்ள நெய்யை ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் ஆகியவற்றை தாளித்து மிளகாயை சேர்த்து வதக்குங்கள். இந்தக் கலவையை, சாதக் கலவையோடு சேர்த்துக் கலந்தால் மும்பை சாதம் தயார்.