கூட்டாஞ்சோறு
 தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி - 2 கப், துவரம் பருப்பு - அரை கப், கேரட், கத்தரிக்காய், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு ஆகியவை - தலா 1, வாழைக்காய் - பாதியளவு, முருங்கைக்கீரை, அரைக் கீரை, முளைக் கீரை - தலா 2 கைப்பிடி, சின்ன வெங்காயம், மிளகாய் வற்றல் - தலா 8, பூண்டு - 6 பல், கடுகு, உளுந்து, சீரகம் - தலா 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - சிறிதளவு, தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன், எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன், புளி - சிறிய எலுமிச்சை அளவு, வடகம் - 3 துண்டு, உப்பு - தேவைக்கு.
செய்முறை
காய்களை சிறு துண்டுகளாக நறுக்குங்கள். வெங்காயம், பூண்டு, தேங்காய்த் துருவல், மிளகாய், சீரகம் ஆகியவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்தெடுங்கள். புளியை சிறிதளவு நீரில் கெட்டியாகக் கரைத்து வையுங்கள். அரிசி, பருப்புடன் காய்கள், கீரை வகைகள், மஞ்சள் தூள், உப்பு, அரைத்த விழுது, புளிக் கரைசல், நான்கு கப் தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து குக்கரில் போட்டு மூடி வையுங்கள். 1 விசில் வந்ததும், மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் வைத்து இறக்குங்கள். எண்ணெயில் கடுகு, உளுந்தை தாளித்து, வடகத்தைப் பொரித்தெடுங்கள். இந்த வடகக் கலவையைச் சாதத்தோடு சேர்த்துக் கிளறுங்கள்.
|