கறிவேப்பிலை சாதம்



தேவையான பொருட்கள்

உதிராக வடித்த சாதம் -2 கப், கடுகு, உளுந்து -தலா அரை டீஸ்பூன், கடலைப் பருப்பு-2 டீஸ்பூன், எண்ணெய் -1 டேபிள் ஸ்பூன், நெய் - 2 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக்கு.
பொடிக்க: மிளகு, கசகசா - தலா 1 டீஸ்பூன், சீரகம் - 2 டீஸ்பூன், முந்திரி - 4, கறிவேப்பிலை - 1 கப், தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன், மிளகாய்
வற்றல்-6.

செய்முறை

கறிவேப்பிலையை சுத்தம் செய்து வெறும் வாணலியில் சிறிது சிறிதாகப் போட்டு வறுத்தெடுங்கள். பிறகு மிளகு, சீரகம், கசகசா, மிளகாய் வற்றல், முந்திரி, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை வறுத்தெடுத்து ஆறியதும் கறிவேப்பிலை உட்பட வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பொடித்து வையுங்கள். எண்ணெய் மற்றும் நெய்யைக் காயவைத்து கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு ஆகியவற்றை தாளியுங்கள். சாதத்தில் பொடித்த பொடி, உப்பு, தாளிதக் கலவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து கலக்குங்கள்.