புதினா கத்தரிக்காய் சாதம்



தேவையான பொருட்கள்

உதிராக வடித்த சாதம் - 2 கப், பச்சை கத்தரிக்காய் - 8, பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 2, புளிக் கரைசல் - 1 டேபிள் ஸ்பூன், கடுகு, சீரகம், மஞ்சள் தூள் - தலா அரை டீஸ்பூன், நெய் - 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக்கு.
அரைக்க: தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன், புதினா, மல்லி - தலா அரை கட்டு, பச்சை மிளகாய் - 4, பூண்டு - 6 பல்.

செய்முறை

அரைக்கக் கூறப்பட்டுள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து நைஸாக அரையுங்கள். வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய் இவற்றை நீளவாக்கில், மெல்லியதாக நறுக்குங்கள். எண்ணெய், நெய்யைக் காயவைத்து கடுகு, சீரகத்தை தாளித்து வெங்காயம், கத்தரிக்காயைச் சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள் தூவி ஐந்து நிமிடம் வதக்குங்கள். பிறகு, அரைத்த விழுது, தக்காளி, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து பச்சை வாடை போக வதக்கி, புளிக் கரை
சலை சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்குங்கள். இந்தக் கலவையை சாதத்தோடு சேர்த்துக் கிளறுங்கள்.