ஸ்பெஷல் எலுமிச்சை சாதம்தேவையான பொருட்கள்

பச்சரிசி - 2 கப், பால் - 1 கப், எலுமிச்சம் பழச்சாறு - 2 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன், வேக வைத்த கொண்டைக் கடலை - கால் கப், கடுகு - 1 டீஸ்பூன், உளுந்து, கடலைப் பருப்பு - தலா 2 டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 3, பெருங்காயம் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் - 3, இஞ்சி - 1 துண்டு, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவைக்கு.

செய்முறை

அரிசியுடன் பால், மூன்று கப் தண்ணீர், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து உதிராக வேக வையுங்கள். பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை இவற்றை ஒன்றிரண்டாக நசுக்குங்கள். எண்ணெயில் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை சிவக்க வறுத்தெடுங்கள். பிறகு பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி, மஞ்சள்தூள், உப்பு, எலுமிச்சம் பழச்சாறு, கொண்டைக் கடலை ஆகியவற்றைச் சேர்த்து கிளறி இறக்குங்கள். இந்தக் கலவையோடு சாதத்தை சேர்த்துக் கிளறுங்கள்.