தினம் ஒரு கலந்த சாதம்பள்ளிக்கூடம்  திறந்தாச்சு... தினம் தினம் குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸில் என்ன சாதம் வைத்துக் கொடுப்பது என்பதுதான் பல அம்மாக்களின் கவலை. பிள்ளைகள் வீட்டில் இருக்கும்போது வெரைட்டி காட்டி சந்தோஷப்படும் அம்மாக்களால், காலை நேர பரபரப்பில் அப்படி ஜமாய்க்க முடியாது.

அதிலும் வேலைக்குப் போகும் அம்மாக்கள் என்றால் சமையலுக்காக மெனக்கெடுவதை யோசித்துக்கூடப் பார்க்க முடியாது. எல்லோருக்கும் செய்வதையே  குழந்தைகளுக்கும் கொடுத்தனுப்பும் ேபாது, அதில் இரண்டு ஸ்பூன் அளவுக்கு மட்டுமே காலியாகி இருக்கும்.

இந்தப் பிரச்னைக்கு சுலபத் தீர்வு, கலந்த சாதங்கள்! ‘‘புளிசாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம் என்றில்லாமல் தினம் ஒரு வெரைட்டி ரைஸ் செய்யலாம்’’ என்கிறார் சித்ரா. இல்லத்தரசியான இவர் கல்கண்டு சாதம், நெல்லிக்காய் சாதம், உடலுக்கு வலு சேர்க்கும் உளுந்து பொடி சாதம், காளான் சாதம்… என்று 30 வகையான வெரைட்டி ரைஸ்களை செய்து தோழியர்களுக்காக வழங்கியுள்ளார். புதுமையான ரெசிபிக்களை செய்து தினம் உங்கள் குழந்தைகளை அசத்துங்கள்...

தொகுப்பு: ஷம்ரிதி