நிலக்கடலை வறுவல்தேவையான பொருட்கள்

வேக வைத்த வேர்க்கடலை - 200 கிராம்    
உப்பு - தேவையான அளவு    
சின்ன வெங்காயம் - 100 கிராம்    
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்    
கடுகு - அரை டீஸ்பூன்    
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்    
கடலை எண்ணெய் - 2 டீஸ்பூன்    
சீரகம் - 1 டீஸ்பூன்    
உளுந்து - 1 டீஸ்பூன்.

செய்முறை

கடாயில் எண்ணெய் சூடானதும், கடுகு, கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு, சீரகம் சேர்த்து தாளிக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளியைச் சேர்த்து வதக்கவும். இதனுடன் வேகவைத்த வேர்க்கடலை, உப்பு, மிளகுத்தூளைச் சேர்த்து நன்கு பிரட்டி இறக்கவும்.

குறிப்பு: நிலக்கடலையைத் தொடர்ந்து 50 கிராம் வீதம், 2 (அ) 3 மாதங்கள் வறுத்தோ, வேக வைத்தோ உண்டு வந்தால் ஆண்களின் பிரச்சினை தீரும்.