ஜாதிக்காய் பால்தேவையான பொருட்கள்

ஜாதிக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
பால் - 750 மி.லி,
சுக்கு பொடி - 1/2 டீஸ்பூன்,
ஏலக்காய் - 2,
வெல்லம் - 2 டீஸ்பூன்.

செய்முறை

பாலில் ஜாதிக்காய் பொடி, சீரகம், பொடித்த வெல்லம், சுக்குப்பொடி, ஏலக்காயைச் சேர்க்கவும். பால் சுமார் 500 மி.லி. வரும் வரை காய்ச்சவும். சுவையான ஜாதிக்காய் பால் தயார். இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் குடித்தால் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. இந்த பால் தேவையற்ற மனக்குழப்பம், மன அழுத்தம், ெடன்ஷனைக் குறைக்கும்.