செவ்வாழை மில்க் ஷேக்தேவையான பொருட்கள்

செவ்வாழை : 1 (கனிந்தது)    
பேரீச்சம்பழம் : 5    
வால்நட் : 3    
குளிர்ந்த பால் : 400 மி.லி.

செய்முறை

செவ்வாழை பழத்தை சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் கொட்டை நீக்கிய பேரீச்சம் பழம், வால்நட் பருப்பு மற்றும் பால் சேர்த்து மிக்ஸில் நுரை வரும் வரை அரைத்துக் கொள்ளவும். கூடுதல் சுவைக்குத் தேன் சேர்த்துக் கொள்ளலாம். புளிக்காத தயிரில் செவ்வாழை ஸ்மூதி செய்து சாப்பிடலாம். ரத்த அணுக்களை உடல் அதிகரிக்க கூடிய திறன் செவ்வாழைக்கு உண்டு. மேலும் உடல் சூட்டையும் குறைக்கும்.