பசலைக்கீரை ரைஸ்தேவையான பொருட்கள்

பசலைக்கீரை - 1/2 கட்டு
ப்ரவுன் ரைஸ் - 250 கிராம்
இஞ்சி பூண்டு விழுது -
2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
முந்திரி - 3
தண்ணீர் - தேவையான அளவு
நெய் -1 மேஜைக்
கரண்டி
பெரிய
வெங்காயம் - 1
மிளகுத்தூள்- தேவையான அளவு
சீரகம் - 2 டீஸ்பூன்
நறுக்கிய மல்லித்தழை-    சிறிதளவு.

செய்முறை

பசலைக்கீரையை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும். ப்ரவுன் ரைஸை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். அரிசியை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் நெய் சேர்த்து, சூடானதும் நறுக்கிய வெங்காயம், சீரகம், இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும். தேவையான உப்பு, வேகவைத்த பிரவுன் ரைஸ், மிளகுத்தூளைச் சேர்த்து பிரட்டி, மல்லித்தழையை சேர்த்து அலங்கரிக்கவும்.

குறிப்பு :  பிரவுன் ரைசில் எதிர்ப்பு சக்தி மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் உடலுக்கு நல்லது. உடலில் உள்ள மாசுக்கள் வெளியேறும். அரிசியை 1 டம்ளர் அளவிற்கு, 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து வேகவைக்க வேண்டும்.