செவ்வாழை அவகடோ ஸ்மூதிதேவையான பொருட்கள்

செவ்வாழை பழம் - 2 (கனிந்தது)    
அவகடோ பழம் - 1
கிவி பழம் - 2
தேன் - 1 மேஜைக்கரண்டி    
தண்ணீர் - 50 மி.லி.
புளிக்காத தயிர் - 100 மி.லி.

செய்முறை

தோல் நீக்கிய கனிந்த செவ்வாழை, அவகடோ, கிவி பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி, அதனுடன் தேன், புளிக்காத தயிர், தண்ணீரைச் சேர்த்து, மிக்ஸியில் நன்கு  நுரை வரும் வரை அடித்துக் கொள்ளவும். பிறகு ஃபிரிட்ஜில் வைத்து ஜில்லென்று குடிக்கலாம்.

குறிப்பு: வைட்டமின் பி, இ, சி, புரதச்சத்து மற்றும் ப்ரோமெலைன் (Bromelin) சத்து நிறைந்துள்ளது.