ஆளி விதை மிக்ஸ்டு நட்ஸ் மில்க்
 
 
  தேவையான பொருட்கள்   பாதாம் பருப்பு :  5 - 7     வால்நட் பருப்பு : 3     ஆளி விதை : 2 மேஜை கரண்டி     குளிர்ந்த பால் : 400 மி.லி.     ஸ்ட்ராபெர்ரி : 5 - 6     தேன் : 1 மேஜைக்கரண்டி     ஏலக்காய் : 3. 
  செய்முறை 
  பாதாம் பருப்பை இரவே ஊறவைத்து தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். வால்நட், ஸ்ட்ராபெர்ரியையும் நறுக்கி தனியே வைக்கவும். ஆளி விதையை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பாதாம் பருப்பு, வால்நட், ஸ்ட்ராபெர்ரி மற்றும் ஆளி விதை அனைத்தையும் ஏலக்காய், தேன், பால் சேர்த்து நன்கு மைய அரைத்துக் கொள்ளவும். குறிப்பு: ஒமேகா 3, நார்ச்சத்து, புரதச்சத்து நிறைந்த ஆளி விதை உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.
  
 |