ஆளி விதை எள் பொடி
 தேவையான பொருட்கள் கறுப்பு எள் : ½ கப் ஆளிவிதை : ¼ டீஸ்பூன் பெருங்காயத்தூள் : ¼ டீஸ்பூன் கறிவேப்பிலை (உருவிய இலை) : ½ கப் கடலை பருப்பு : ¼ கப் வரமிளகாய் : 2 உப்பு : தேவையான அளவு உளுந்து : ½ கப்.
செய்முறை
கடாயில் மிதமான சூட்டில் கறுப்பு எள்ளைப் வறுத்து தனியே வைக்கவும். அதே கடாயில் மிதமான சூட்டில் ஆளி விதை, உளுந்து வறுக்கவும். உளுந்து வறுபட்ட வாசனை வந்தவுடன் கடலைப் பருப்பைச் சேர்த்து வறுக்கவும். இதனுடன் கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், வரமிளகாய் சேர்த்து வறுத்து, ஆறியவுடன், உப்பைச் சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும். சூடு நன்றாக ஆறியதும் காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால் பல நாட்களுக்குக் கெடாமல் இருக்கும். சூடாக டப்பாவில் வைத்தால் பூசனம் பிடித்து விடும்.
|