பசலைக்கீரை ரொட்டி



தேவையான பொருட்கள்

பசலைக்கீரை -  
½ கட்டு, கோதுமை மாவு - 2 கப்,
ராகி மாவு - 1கப்
சின்ன வெங்காயம்- 50 கிராம்
எண்ணெய்- தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு
சீரகம் - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2-3    
மல்லித்தழை- சிறிதளவு.

செய்முறை

பசலைக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். ஒரு அகலமானப் பாத்திரத்தில் கோதுமை மற்றும் ராகிமாவைச் சேர்த்து கலக்கவும். அதனுடன் கீரை, சின்ன வெங்காயம் (விதைகள் நீக்கிய), வரமிளகாய், மல்லித்தழை, சீரகம், உப்பு சேர்த்து போதுமான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும். பிறகு சப்பாத்தி போல் திரட்டி தோசைக்கல்லின் இருபுறம் எண்ணெயைச் சேர்த்து சுட்டு எடுக்கவும். சுவையான பசலைக்கீரை ரொட்டி தயார்.

குறிப்பு: இரும்புச்சத்து, போலிக் அமிலம், ஏராளமான விட்டமின்கள், மினரல்களுடைய பசலைக்கீரை விந்தணுவை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.