பூனைக்காலி விதை உருண்டை



தேவையான பொருட்கள்

பொட்டுக்கடலை - 200 கிராம்,
பூனைக்காலி விதை - 50 கிராம்,
உலர்ந்த திராட்சை - 1 ேமஜைக்
கரண்டி,
பாதாம் - 5, முந்திரி - 5,
ராகி - 30 கிராம்,
வெல்லம் - தேவையான அளவு,
தேங்காய்த்
துருவல் -  3 மேஜைக்கரண்டி,
நெய் -   2 மேஜைக்கரண்டி.

செய்முறை

கடாயில் பூனைக்காலி விதை சேர்த்து தீயாமல் வறுக்கவும். அதனுடன் பொட்டுக் கடலை, ராகியைச் சேர்த்து வறுக்கவும். சூடு ஆறியவுடன் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும். கடாயில் நெய் சேர்த்து, சூடானவுடன் பொடியாக நறுக்கிய உலர்ந்த திராட்சை, பாதாம், முந்திரியைச் சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்த மாவைச் சேர்த்து ஒன்றாகப் பிரட்டவும். கூடவே தேங்காய்த் துருவல், பொடித்த வெல்லத்தைச் சேர்த்து பிரட்டவும். சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும். சுவையான பூனைக்காலி விதை உருண்டை தயார்.

குறிப்பு: பூனைக்காலி விதை சூரணத்தை 500 மி.கிராம் முதல் 1000 மி.கிராம் அளவைத் தினமும் பாலில் கலந்த அருந்தினால், மேக நோய்கள் குணமாகும். பூனைக்காலி விதை வெள்ளை கறுப்பு நிறத்தில் இருக்கும். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.