புரொக்கோலி வறுவல்தேவையான பொருட்கள்

புரொக்கோலி -1 கப்
(நறுக்கியது),
குடை மிளகாய் - 1,
மிளகுத்தூள் - தேவையான அளவு,
சின்ன வெங்காயம்-200 கிராம்,
பொடியாக நறுக்கிய பூண்டு -2 மேஜைக்
கரண்டி,    
எண்ணெய் - 1/2 மேஜைக்கரண்டி,    
உப்பு - தேவையான அளவு,  
நறுக்கிய கறி
வேப்பிலை -
சிறிதளவு,
பட்டை - ½ இன்ச் அளவு,
கிராம்பு - 2,
கடுகு - 1 டீஸ்பூன்.

செய்முறை

கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, பொடித்த பட்டை, கிராம்பை சேர்த்து வதக்கவும். உடன் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டைச் சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் நறுக்கிய புரொக்கோலி, குடை மிளகாய், உப்பு, மிளகுத்தூளைச் சேர்த்து வேக வைத்து இறக்கவும். கறிவேப்பிலையைச் சேர்த்து அலங்கரிக்கவும்.