சோயா பீன்ஸ் புலாவ்



தேவையான பொருட்கள்

சோயா பீன்ஸ் : 100 கிராம்     
குடைமிளகாய் : 1    
கேரட் : 1
முட்டைக்கோஸ் : 50 கிராம்    
மாப்பிள்ளை சம்பா அரிசி : 200 கிராம்    
நல்லெண்ணெய் : 1 மேஜைக்
கரண்டி    
சின்ன வெங்காயம் : 100 கிராம்    
மல்லித்தழை : சிறிதளவு    
உப்பு : தேவையான அளவு    
பட்டை, கிராம்பு : சிறிதளவு    
மிளகுத்தூள் : தேவையான அளவு    
இஞ்சி பூண்டு விழுது: 1 மேஜைக் கரண்டி    
சீரகம் : 2 டீஸ்பூன்    
தண்ணீர் : தேவையான அளவு.

செய்முறை

சோயா பீன்சை இரவே ஊற வைக்கவும். அரிசியைச் சுத்தம் செய்து 2 மணி நேரம் ஊற வைத்து அரைபதம் வேக வைத்து தனியே வைக்கவும். கடாயில் எண்ணெய் சேர்த்து, சூடாதும் இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும். கூடவே சீரகம், சிறு துண்டுகளாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். பிறகு பட்டை, கிராம்பு, பொடியாக நறுக்கிய கேரட், முட்டைக் கோஸ், குடைமிளகாயைச், ஊறவைத்துள்ள சோயா பீன்ஸ், வேக வைத்த அரிசியை சேர்த்து மிக்ஸ் செய்யவும். உப்பு, மிளகுத்தூள் தேவையான அளவு தண்ணீரை சேர்த்து இரண்டு விசில் விட்டு இறக்கவும். மல்லித்தழையை கொண்டு அலங்கரிக்கவும்.