ஆண்களுக்கான ஆரோக்கிய சமையல்காலம் மாற மாற விஞ்ஞானத்தை தேடி நாம் பயணிக்கிறோம். அவசர உலகில் நம் உடலை காத்திட நேரமில்லாமல் மருத்துவமனையை அதிகம் நாடி வாழ்கிறோம். முக்கியமாக குழந்தையின்மைப் பிரச்னைக்காக ஆண்களும், பெண்களும் கருத்தரிப்பு மையத்தை அதிகம் நாடுகிறார்கள்.

மன அழுத்தம், உண்ணும் உணவு,  மாசுத்தொல்லை, தூக்கமின்மை, மது, புகை, ஃபாஸ்ட் ஃபுட், சமூக மாற்றங்கள் மற்றும் பழக்க வழக்கங்கள் போன்ற காரணத்தால் ஆண்களும், பெண்களும் குழந்தையின்மை பிரச்னையில் அதிகம் தவிக்கிறார்கள். லட்சக்கணக்கில் மருத்துவமனைக்குச் செலவழிக்கிறார்கள்.

ஆண்களும் பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தினால் உடலின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க நேரமில்லாமல் கிடைத்ததை உண்டு வாழ்கிறார்கள். உண்ணும் உணவை ஆரோக்கியமாக உண்டாலே அனைத்து பிரச்னைகளில் இருந்து எளிதில் விடுபடலாம். சரியான நேரத்தில் ஆரோக்கிய உணவுகளை பக்குவமாக உண்டு வந்தாலே நம் உடலில் உள்ள அனைத்துப் பிரச்னைகளுக்கும் ஒரு நல்ல தீர்வு வரும்.

திருமணமானவர்கள் இனிதே வாழ்ந்திட இந்த உணவுகள் பயனுள்ளதாக இருக்கும். ஆண்டவன் கொடுத்த வாழ்வை வீணாக்காமல் இனிதே வாழ்வது நம் கடமையாகும் என்கிறார் சமையல் கலைஞர் பிரியா பாஸ்கர்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்