பாசிப்பருப்பு பணியாரம்என்னென்ன தேவை?

பச்சரிசி - 2 கப்,
பொடித்த வெல்லம் - 1½ கப்,
வேகவைத்த பாசிப்பருப்பு - 1 கப்,
ஏலப்பொடி - 1/2 டீஸ்பூன்,
தேங்காய்த்துருவல் - 1/4 கப், பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பச்சரிசியை 1 மணி நேரம் ஊறவைத்து வடித்து நிழலில் உலர்த்தி மிக்சியில் நைசாக அரைத்து சலித்து கொள்ளவும். கடாயில் 1/2 டம்ளர்  தண்ணீர், வெல்லம் சேர்த்து இளம்பாகு காய்ச்சவும். பாகு தண்ணீரில் போட்டு எடுத்தால் உருட்டும் பதத்தில் இருக்க வேண்டும். பாகை  இறக்கி மாவு, ஏலக்காய்த்தூள், பாசிப்பருப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து 10 நிமிடம் ஊறவிட்டு பிறகு  சூடான எண்ணெயில் பணியாரமாக சுட்டு எடுக்கவும்.