தேங்காய் பணியாரம்



என்னென்ன தேவை?

பச்சரிசி - 2 கப்,
உளுந்து - 100 கிராம்,
தேங்காய்த்துருவல் - 1 கப்,
பொடித்த வெல்லம் - 1½ கப்,
வெந்தயம் - 1 டீஸ்பூன்,
உப்பு - 1 சிட்டிகை,
பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பச்சரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் ஒன்றாக ஊறவைத்து 2 மணி நேரம் கழித்து தண்ணீர் அதிகம் சேர்க்காமல் அரைத்து, அதனுடன்  தேங்காய்த்துருவல், வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து மேலும் 10 நிமிடம் அரைக்கவும். பின்பு மாவை பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து  கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து சிறு சிறு உருண்டைகளாக போட்டு வெந்ததும் எடுத்து பரிமாறவும்.