வாழைப்பழ பணியாரம்



என்னென்ன தேவை?

மைதா - 1 கப்,
வாழைப்பழம் - 2,
ரவை, தேங்காய்த்துருவல் - தலா 2 டீஸ்பூன்,
சர்க்கரை - 1/4 கப்,
ஏலப்பொடி - சிறிது,
சோடா உப்பு - 1 சிட்டிகை,
பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

வாழைப்பழத்தை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். அதனுடன் மைதா, ரவை, சர்க்கரை, தேங்காய்த்துருவல், ஏலப்பொடி, சோடா  உப்பு, சிறிது தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கலந்து அரைமணி நேரம் ஊறவிடவும். ஊறியதும் கரண்டியால் நன்கு கலந்து,  குழிப்பணியாரக் கல்லை சூடாக்கி எண்ணெய் விட்டு அதில் மாவை ஊற்றி இருபுறமும் வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.