சோயா பணியாரம்



என்னென்ன தேவை?

மீல்மேக்கர் - 20,
கடலைப்பருப்பு - 1 கப்,
அரிசி - 1/2 கப்,
பாசிப்பருப்பு - 1/4 கப்,
நறுக்கிய சின்ன வெங்காயம் - 1/4 கப்,
பச்சைமிளகாய் - 2 டீஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிது,
இஞ்சி - 1 துண்டு,
பூண்டு - 5 பல்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

அரிசி, பருப்பு வகைகளை ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும். சோயா உருண்டைகளை கொதி நீரில் போட்டு 10 நிமிடம் கழித்து அதை  பச்சை தண்ணீரில் நன்றாக கழுவி எடுக்கவும். கழுவிய சோயா உருண்டையை மிக்சியில் அடித்து, மாவுக் கலவையுடன் கலந்து  கொள்ளவும். கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லியை சேர்த்து வதக்கி  அதையும் மாவுக் கலவையில் கொட்டி உப்பு போட்டு கலந்து கொள்ளவும். குழிப்பணியாரக் கல்லை சூடாக்கி எண்ணெய் விட்டு மாவை  ஊற்றி இருபுறமும் வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.

குறிப்பு : புளிப்பு தேவையெனில் சிறிது எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கொள்ளவும்.