ரவை பணியாரம்



என்னென்ன தேவை?

ரவை - 2 கப்,
சர்க்கரை - 1/2 கப்,
மைதா - 1/4 கப்,
தேங்காய்ப்பால் - 2 டம்ளர்,
ஏலப்பொடி - சிறிது,
பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் ரவை, தேங்காய்ப்பால் சேர்த்து கெட்டியாக பிசைந்து அரைமணி நேரம் ஊறவிடவும். பின்பு அதனுடன் மைதா, ஏலப்பொடி,  சர்க்கரை சேர்த்து பிசையவும். சிறிது நேரம் கழித்து கலந்தால் மாவு தளர்வாக தோசை மாவுப் பதத்திற்கு இருக்கும். கடாயில் எண்ணெயை  காயவைத்து ஒரு குழிக்கரண்டியில் மாவை அள்ளி ஊற்றவும். பணியாரம் உப்பி மேல் வரும்போது திருப்பி விட்டு மெத்தென்று வந்ததும்  எடுத்து சூடாக பரிமாறவும்.