கலர்ஃபுல் பணியாரம்என்னென்ன தேவை?

இட்லி மாவு - 5 கப்,
பீட்ரூட் துருவல், ஊறவைத்த ஜவ்வரிசி, பொடித்த முந்திரி - தலா 1/4 கப்,
அரைத்த பாலக்கீரை - 1/4 கப், கேரட் துருவல், மஞ்சள் பூசணி துருவல் - தலா 1/2 கப்,
பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் - தேவைக்கு,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

5 கப் இட்லி மாவை தனித்தனியாக பாத்திரத்தில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு கலவையிலும் தனித்தனியாக பீட்ரூட் துருவல், கேரட்  துருவல், பாலக் கீரை, பூசணித் துருவல், ஜவ்வரிசியை கலந்து அதனுடன் ஒவ்வொரு கலவையிலும் முந்திரி, வெங்காயம், பச்சைமிளகாய்  கலந்து, குழிப்பணியாரக் கல்லை சூடாக்கி எண்ணெய் விட்டு மாவை ஊற்றி இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். ஒவ்வொரு நிறத்தில்  பார்க்க அழகாகவும், சுவையாகவும் இருக்கும்.