பனீர் பணியாரம்



என்னென்ன தேவை?

துருவிய பனீர் - 1½ கப்,
மைதா - 1/2 கப்,
பால் - 1 கப், ரோஸ்
எசென்ஸ் - 1/2 டீஸ்பூன்,
பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் பனீர், மைதா மாவு கலந்து பால் ஊற்றி கரைத்துக் கொள்ளவும். சர்க்கரையில் சிறிது தண்ணீர் சேர்த்து கம்பி பதத்திற்கு  காய்ச்சி இறக்கி ரோஸ் எசென்ஸ் கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து பனீர் கலவை மாவை கரண்டியால் ஊற்றி  பொன்னிறமாக பொரித்தெடுத்து சர்க்கரைப் பாகில் முக்கியெடுத்து பரிமாறவும்.