வேர்க்கடலை பணியாரம்



என்னென்ன தேவை?

அரிசி மாவு - 1 கப்,
கடலை மாவு - 1/2 கப்,
தோல் நீக்கி வறுத்த வேர்க்கடலை - 1 கப்,
பொட்டுக்கடலை, தேங்காய்த்துருவல் - தலா 1/4 கப்,
முந்திரி - 20,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு - சிறிது,
எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

வேர்க்கடலை, முந்திரி, பொட்டுக்கடலை மூன்றையும் மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும். பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை  மாவு, உப்பு, மிளகாய்த்தூள், தேங்காய்த்துருவல் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். குழிப்பணியாரக் கல்லை சூடாக்கி  எண்ணெய் விட்டு அதில் மாவை ஊற்றி இருபுறமும் வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.