மசாலா பணியாரம்



என்னென்ன தேவை?

பச்சரிசி - 2 கப்,
உளுந்தம்பருப்பு - 1½ கப்,
தேங்காய்த்துருவல் - 1/4 கப்,
தாளிக்க கடுகு - 1/2 டீஸ்பூன்,
உளுந்து - 1 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 1/4 கப்,
பச்சைமிளகாய் - 4,
நறுக்கிய கறிவேப்பிலை - 2 கொத்து,
உப்பு, பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பச்சரிசி, உளுந்து இரண்டையும் சேர்த்து 1 மணி நேரம் ஊறவைத்து கெட்டியாக அரைத்து உப்பு போட்டு கலந்து கொள்ளவும். கடாயில் 2  டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய் வதக்கி தேங்காய்த்துருவல் வதக்கி  இறக்கவும். ஆறியதும் மாவில் கொட்டி கலந்து கைகளால் மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து சூடான எண்ணெயில் போட்டு  பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். மல்லி சட்னி, தேங்காய் சட்னியுடன் சூடாக பரிமாறவும்.