பேரீச்சம்பழம் பணியாரம்



என்னென்ன தேவை?

பதப்படுத்திய அரிசி மாவு - 2 கப்,
பேரீச்சம்பழம் - 20,
காய்ந்த திராட்சை - 10,
தேங்காய்த்துருவல் - 1/4 கப்,
பொடித்த முந்திரி - 1 டீஸ்பூன்,
உப்பு - சிறிது,
பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பேரீச்சம்பழத்தை கொட்டை நீக்கி அதனுடன் காய்ந்த திராட்சை சேர்த்து 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து மிக்சியில் போட்டு  அரைக்கவும். அதனுடன் அரிசி மாவை சேர்த்து ஒரு சுற்று சுற்றி அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்பு தேங்காய்த்துருவல், முந்திரி, உப்பு  சேர்த்து அரைமணி நேரம் ஊறவைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து குழிக்கரண்டியால் மாவை ஊற்றி பொரித்தெடுத்து  பரிமாறவும்.