இனிப்புச் சீயம்என்னென்ன தேவை?

பச்சரிசி - 2 கப்,
உளுந்து - 1 கப்,
உப்பு - 1 சிட்டிகை,
எண்ணெய் - தேவைக்கு.

பூரணம் செய்ய...

பாசிப்பருப்பு அல்லது கடலைப்பருப்பு - 1 கப்,
தேங்காய்த்துருவல் - 1/2 கப்,
பொடித்த வெல்லம் - 1 கப்,
ஏலப்பொடி - 1/2 டீஸ்பூன்,  பொடியாக நறுக்கிய முந்திரி - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

அரிசி, உளுந்து இரண்டையும் சேர்த்து 1 மணி நேரம் ஊறவைத்து அரைத்து எடுக்கவும். பாசிப்பருப்பை குழையாமல் வேகவைத்து எடுத்து  கொண்டு அதனுடன் வெல்லம், ஏலப்பொடி, முந்திரி சேர்த்து அடுப்பில் வைத்து கிளறி இறக்கி ஆறவிடவும். இந்த பூரணத்தை சிறு சிறு  உருண்டைகளாக உருட்டி அரைத்த மாவில் முக்கியெடுத்து சூடான எண்ணெயில் போட்டு மொறுமொறுவென்று பொரித்தெடுத்து பரிமாறவும்.