தேங்காய்ப்பால் இளநீர் பாயசம்



என்னென்ன தேவை?

இளநீர், தேங்காய்ப்பால் - தலா 1/2 கப்,
சர்க்கரை - 1 டீஸ்பூன்,
கன்டென்ஸ்டு மில்க் - 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

இளநீர் வழுக்கையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இளநீர், இளநீர் வழுக்கை, தேங்காய்ப்பால், சர்க்கரை, கன்டென்ஸ்டு மில்க் கலந்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரிமாறவும்.