தேங்காய்ப்பால் மீன் குழம்பு



என்னென்ன தேவை?

விருப்பமான மீன் துண்டுகள் - 6,
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 6,
புளி - எலுமிச்சைப்பழ அளவு,
வடகம் - 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 10 இலைகள்,
தேங்காய்ப்பால் - 1 கப்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

அரைக்க...

மிளகு, சீரகம், தனியா - தலா 1 டீஸ்பூன்,
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்,
தக்காளி - 4,
கறிவேப்பிலை - 15 இலைகள்.

எப்படிச் செய்வது?

அரைக்க கொடுத்த பொருட்களை விழுதாக அரைத்துக் கொள்ளவும். புளியை கரைத்து வடித்து அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து வடகத்தை போட்டு பொரிந்ததும் கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு கரைத்த புளி கலவை, அரைத்த விழுது, 1/2 கப் தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும். நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் மீன் துண்டுகளை போட்டு மீன் வெந்ததும் தேங்காய்ப்பால் ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கி சாதம், இட்லி, தோசையுடன் பரிமாறவும்.